‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , நடிகை ஆலியா பட் , பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கவுள்ளனர்.
இதில் ஆலியா பட் நடிக்கவிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாதில் தொடங்கவுள்ளது. இதில் ஒரு பிரம்மாண்டப் பாடலின் படப்பிடிப்பும் அடங்கும்.
இந்தப் பாடலை ஆலியா பட்டே பாடுவார் என்று தெரிகிறது. அவருக்குத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் பரிச்சயம் இல்லை என்பதால் இந்தியில் மட்டும் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.