]பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ஆலியா பட்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில், காரிலிருந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றைப் பகிர்ந்துள்ள ஆலியா, “ஒரு வழியாக ‘ஆர் ஆர் ஆர்’ குழுவைச் சந்திக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆலியாவின் வருகைக்கு, “எங்கள் அன்பார்ந்த சீதாவுக்கு அன்பான வரவேற்பு. மிகவும் திறமையான, அழகான ஆலியா ‘ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்புத் தளத்தில் !” என்று படக்குழுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், புகைப்படம் பகிர்ந்து வரவேற்பு தெரிவித்துள்ளது.