டில்லி:

பாஜக எம்.பி.யான சத்ருகன்சின்ஹா, மோடியையும், அவரது  தலைமையிலான அமைச்சரவை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்ருகன் சின்ஹா,

மத்தியில் இருப்பது “அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமராக மோடி தேர்வானதும்,  பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னா தொகுதி பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா,  கட்சித்தலைமைக்கும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஏற்கனவே  பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிக்கு எதிராக கருத்துக்களை  தெரிவிருந்த நிலையில், சமீபத்தில், திரிபுரா மாநில  பா.ஜ.க. பதவி ஏற்பு விழாவின்போது, அத்வானியை அவமதித்த மோடி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்கா பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் கட்சிக்குசவால் விடுத்தும்  பேசி உள்ளார்.

அப்போது, நியூட்டனின் 3-வது விதிப்படி,  ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்பதை மோடியும் அவரது சகாக்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தறபோது மத்தியில் இருப்பது “அலிபாபாவும்  40 திருடர்களின் அரசு” என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர் என்று கூறினார்.

இதை கூறியதற்காக என்மீது முடிந்தால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என்றும் சவால் விட்டார்.

பாஜக அரசை பாஜக எம்.பியே இவ்வளவு பகிரங்கமாக திருடர்களின் அரசு என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.