ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரியவன்ஷி’. இத்திரைப்படம் வரும் மார்ச் 24, 2020-அன்று வெள்ளித்திரையில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நான்கு நிமிட-பதினைந்து வினாடி நீளம் கொண்ட இந்த ட்ரைலர் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் நிறைந்ததாக உள்ளது. கார்கள் காற்றில் பறக்கின்றன.

சூரியவன்ஷியின் மனைவியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார், அஜய் தேவ்கன் (சிங்கமில் பாஜிராவ் சிங்கம்) மற்றும் ரன்வீர் சிங் (சிம்பாவில் சங்கரம் பலேராவ்) ஆகியோர் இந்த படத்தில் கேமியோவாக நடித்துள்ளனர். ஜாக்கி ஷிராஃப் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.

[youtube-feed feed=1]