அக்ஷய் குமாரின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது யாஷ் ராஜ் பிலிம்ஸ் தனது ‘பிரித்விராஜ்’ எனும் வரலாற்றுத் திரைப்படத் தயாரிப்பை அறிவித்துள்ளது.
அச்சம் என்பதையே அறியாத மாபெரும் வீர அரசனான பிரித்விராஜ் சௌஹானின் வாழ்க்கை மற்றும் அவரது வீரதீர பண்பியல்புகள் அடிப்படையில் ‘பிரித்விராஜ்’ படம் உருவாகிறது.
சாணக்கியா என்ற வரலாற்றுப் தொலைக்காட்சித் தொடரை இயக்கிய டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி ‘பிரித்விராஜ்’ படத்தை இயக்குகிறார். 2020 ஆம் ஆண்டு, தீபாவளித் அன்று இப்படம் வெளியாக உள்ளது.