
நடிகர், இயக்குநர் என்பதை எல்லாம் தாண்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ்.
தற்போது திருநங்கைகளுக்கு இல்லம் கட்ட முடிவு செய்துள்ளார் லாரன்ஸ். தனது முடிவினை, ‘லட்சுமி பாம்’ படப்பிடிப்பின் போது அக்ஷய் குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது உடனடியாக 1.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் அக்ஷய் குமார்.
லாரன்ஸ் அறக்கட்டளை தற்போது 15-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அனைத்து திருநங்கைகளின் சார்பாகவும் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்து. பூமி பூஜை தேதியை விரைவில் அறிவிக்கிறோம். உங்கள் அனைவரது ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறேன் என கூறியுள்ளார் லாரன்ஸ்.
Patrikai.com official YouTube Channel