அகிலேஷ் நீக்கம்: வாபஸ் பெற்றார் முலாயம்!

Must read

 

லக்னோ:
மாஜ்வாடி கட்சியில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தந்தை, மகன் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அகிலேஷ் மற்றும் அவரது ஆதரவாளரான ராம்கோபால் வர்மா உள்பட 200 பேரை கட்சியில் இருந்நது அதிரடியாக நீக்கி கட்சி தலைவர் முதலாயம் நடவடிக்கை எடுத்தார்.
ஏற்கனவே கட்சி பணிகளில் முதல்வர் அகிலேசுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பாலுக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. தற்போது, சிவபாலுக்கு ஆதரவாக முலாயம் செயல்படுவதாக அகிலேஷ் குற்றம்சாட்டி வந்த நிலையில் நேற்று அகிலேஷை கட்சியில் இருந்து நீக்கும் அளவிற்கு கட்சியில் பிரச்சினை பூதாகாரமாக வெடித்த்து.
இதைத்தொடர்ந்து அகிலேஷ் அவரது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன் காரணமாக அகிலேஷ் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
அகிலேஷ் என்ன  முடிவு எடுக்கிறார்  செய்ய போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை அகிலேஷ் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அவரது வீட்டில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், மேல்சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள்  பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து கூடியுள்ளனர்.
வீட்டிற்கு வெளியே கூடியுள்ள ஆதரவாளர்கள், அகிலேஷ்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ஆதரவு அகிலேசுக்கு என வெளிப்படையாகவே தெரிவித்தார்.
கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏகோபித்த ஆதரவு அகிலேசுக்கு இருப்பதை அறிந்த முலாயம், கட்சி உடைந்துவிடுமோ என அஞ்சினார். அதையடுத்து அவரம் அவரது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்காரணமாக கட்சி பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டது.  சட்டசபை தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இதுபோல நடவடிக்கை தேவையான என கட்சியின் மூத்த தலைவர்கள் முலாயமிடம் பேசினர்.
இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே சமசர முயற்சியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, அகிலேஷ், ராம்கோபால் யாதவ் உள்பட 229 பேரை கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவை வாபஸ் பெறுவதாக முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக கட்சி பிளவுபடுவது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article