லக்னோ:

சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் மோட்டார் சைக்கிள் சின்னத்தை பெற அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார்.


உ.பி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து, கட்சி இரண்டாக உடையும் நிலையில் உள்ளது.
தந்தை முலாயம்சிங் யாதவுக்கும், மகனும் முதல்வருமான அகிலேஷ்யாதவுக்கும் இடையே மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியலில் மோதல் உருவாகி தற்போது கட்சியை உடைக்கவும், சைக்கிள் சின்னத்தை கைப்பற்றவும் அகிலேஷ் முயற்சி செய்து வருகிறார்.
சைக்கிள் சின்னம் தங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவும், அகிலேஷ் யாதவும் தனித்தனியே தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளனர். இரு தரப்பும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
ஒரு வேளை போட்டி கடுமையானால் சைக்கிள் சின்னத்தை முடக்கும் முடிவை தேர்தல் கமிஷன் எடுக்கும். அதனால் மாற்று ஏற்பாடாக மோட்டார் சைக்கிள் சின்னத்தை கேட்க அகிலேஷ் தரப்பு தயாராக இருக்கிறது. இதற்கான ப்ளு பிர்ண்ட் தயாராக இருப்பதாகவும் அகிலேஷ் தரப்பு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி உடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.