சண்டிகர்: இந்தியக் குடியரசு தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்தானதற்கு, விவசாயிகளின் போராட்டத்தை, மத்திய மோடி அரசு தவறாகக் கையாண்டதே காரணம் என்று தனது கட்சியின் சுக்பீர் சிங் பாதல் விடுத்த அறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது அகாலி தளம் கட்சி.
மோடி அரசின் 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து, முதன்முதலில் பஞ்சாப் மாநிலத்தில்தான் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் வீரியத்தை அடுத்து, மத்திய பாரதீய ஜனதா அமைச்சரவையில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கட்சி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது.
மேலும், அந்த சட்டங்களுக்கு எதிராக, மத்திய பாரதீய ஜனதா கூட்டணியிலிருந்து விலகிவிட்டது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்தானதற்கு, விவசாயிகள் போராட்டம் தொடர்பான மோடி அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என்று அக்கட்சியின் சுக்பீர் சிங் பாதல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், தற்போது அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றுள்ளது அக்கட்சி.