பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் அதில் அசன் என்பவர், தனது வலைத்தளத்தில் 30 வினாடிகள் ஓடும் திருமண வரவேற்பு வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டை தாண்டியும், வைரலாக பரவி வருகிறது.
ஏன்?
அந்த நாட்டில் நடந்த ஒரு திருமண வரவேற்பு விழாவில், மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை, கல்யாண சீர்வரிசையாக அவரது மாமியார் வழங்கும் வீடியோ அது.
வரவேற்பு அரங்கில் நுழையும் அந்த பெண், தன்னுடன் வந்தவர்களிடம் கொடுத்து வைத்திருந்த பார்சலை விரித்து, அதில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த , ஏ,கே.- 47 ரக துப்பாக்கியை எடுத்து கொடுக்கும் போது, அங்கு திரண்டிருந்தோர் ஆரவாரம் செய்து, மணமக்கள் மீது பூக்களை வாரி இறைக்கும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.
Kalashnikov rifle as a wedding present pic.twitter.com/BTTYng5cQL
— Adeel Ahsan (@syedadeelahsan) November 25, 2020
எந்த ஊரில், எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வீடியோ காட்சியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
“பாகிஸ்தான் ஏன், தீவிரவாதிகளின் மையமாக உள்ளது என்பது இப்போது புரிகிறது” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி