மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் திடீரென ஆட்சி அமைந்துள்ள நிலையில், தங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இருப்பதாக, சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு இடையே, திடீர் திருப்பமாக பாஜக, அஜித் பவார் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து, சரத்பவார் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், அஜித் பவாரின் முடிவு கட்சியின் கொள்கைக்கு எதிரானது; என்று கடுமையாக சாடினார், பாஜகவுடன் எந்தக்காலத்திலும் தேசியவாத காங்கிரஸ் இணையாது என்றும், அஜித் பவாரின் முடிவு கட்சியின் கோட்பாட்டிற்கு எதிரானது; தேசியவாத காங்கிரஸின் எந்த தலைவரும், தொண்டரும் பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமைய விரும்பமாட்டார்கள் என்றும் சாடியுள்ளர்.
காங்., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி இன்னும் உயிர்ப்போடு தான் உள்ளது என்று கூறிய சரத்பவார், அஜித்பவாருடன் 10 – 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆளுநர் மாளிகை சென்றுள்ளதாகவும் கூறி ள்ளார்.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து என்பது இன்று காலை தான் தெரிந்தது என்று கூறியவர், தங்களிடம் ஆட்சியமைக்க தேவையான 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்களுக்கு இருந்தது.சுயேட்சை எம்.எல்.ஏக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க இருந்தனர்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் மோசடியாக கையெழுத்து பெறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
.அஜித்பவார் மீதுகட்சி விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.அஜித்பவாருக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டம் பாயும் என எச்சரித்துள்ள சரத்பவார், அஜித் பவாருக்கு பதில் கட்சியின் புதிய சட்டப்பேரவை குழுதலைவர் இன்று மாலை 4 மணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்னும் உயிர்ப்போடுதான் உள்ளத என்று கூறியவர், .பாஜகவுடன் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் விரும்பவில்லை.சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்க வேண்டும் என்பதையே தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறது” என தெரிவித்தார்.