அஜித், ஹீமா குரேசி நடித்த படம் வலிமை.

எச். வினோத் இயக்கி இருந்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24 ம் தேதி திரைக்கு வந்தது.

25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் மார்ச் 25 ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் “2022 ம் ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது.

இந்தப் படம் வரும் 25 ம் தேதி முதல் ஜீ 5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் இதுவரை அதிக வசூலான படமாக மாறியிருக்கிறது வலிமை என்பது இவரது இந்த பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

[youtube-feed feed=1]