வலிமை படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக்கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யாவின் காலம்னா நகரில் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் அலெக்ஸ். தினமும் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு தன்னுடைய காரில் ஏற்றிச் செல்வது வழக்கம்.
அப்படி அழைத்துச் செல்லும்போது அஜித்தின் அன்பாகப் பழகும் குணத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்ஸ் அஜித்துக்கு ‘காலம்னா நகரம் உங்களை நேசிக்கிறது’ என்று அச்சிடப்பட்ட இரண்டு டி-ஷர்ட்களையும் அஜித்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.