‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

’வலிமை’படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் நேற்று காலை சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் வலிமை படப்பிடிப்பை நிறைவு செய்த தல அஜித்தின் அடுத்த கட்ட திட்டம் குறித்த தகவல் வெளியானது. பைக் ரைடிங்கில் மிகவும் ஆர்வமுள்ள தல அஜித் ரஷ்யாவிலிருந்து இந்தியா திரும்புவதற்குள் உலகின் பல இடங்களை 5000 கிலோமீட்டர்கள் நீண்ட பயணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.