
வாரணாசியில் சாலையோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரி கூறியதாவது:
எங்கள் கடைக்கு அவர் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பனாரஸ் சாட் வகைகள் அனைத்தையும் அவர் ரசித்து சாப்பிட்டார்.
அவருக்கு அவை மிகவும் பிடித்துப் போனது, எனவே அடுத்த நாளும் எங்கள் கடைக்கு வந்தார். மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலவே அவரும் சாலையில் நின்று கொண்டே சாப்பிட விரும்பினார். உணவு தயாராகும் முறை கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார் என கூறியுள்ளார் .
Patrikai.com official YouTube Channel