அஜித்குமார் தனது நடிப்பிற்கு இடைவேளை அளித்திருக்கும் நிலையில் கார் ரேசிங்கில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

2025ம் ஆண்டு அஜித் குமார் மற்றும் அவரது கார் ரேசிங் அணி, GT4 ஐரோப்பிய தொடர் மற்றும் க்ரெவென்டிக் எண்டூரன்ஸ் தொடரில் பங்கேற்கிறது.

மிச்செலின் 12H முகெல்லோ மற்றும் 24H துபாய் ஆகிய கார் பந்தயங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்த அஜித்குமார் மற்றும் அவரது அணி, ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் க்ரெவென்டிக் எண்டூரன்ஸ் தொடரில் பங்கேற்கிறது.

இந்த ஆண்டு தொடர்ந்து கார் பந்தய போட்டிகளில் பங்கேற்க இருப்பதை அடுத்து தனது ரேசிங் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ள ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற அதிகாரபூர்வ யூடியூப் சேனலை அஜித்குமார் துவங்கியுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ பாக்ஸ்-ஆபீஸ் ஹிட்டைத் தொடர்ந்து கலைத்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதைப் பெற்றுக்கொண்ட அஜித் குமார் தனது அடுத்த பட வேலைகளுக்கு முன் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.