மோகன்லால் இயக்கி வரும் ‘பரோஸ்’ படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பரோஸ்’. முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முன்னணி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல செய்தி ஊடகத்துக்கு விளக்கமளித்திருக்கும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா , இந்தச் செய்தி வெறும் வதந்தி தான் என கூறியுள்ளார் .