நடிகர் அஜித் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பைக்கில் சுற்றிவருகிறார்.

அஜீத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் இமயமலைக்கு டையெடுத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த மஞ்சுநாத் காஷ்யப் தனது பைக் பஞ்சராகி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

தனக்கு மிகவும் பிடித்த பி.எம்டபள்.யூ பைக் ஒன்று தன்னை கடந்து செல்வதை பார்த்த வேகத்தில் உதவிக்காக கையசைத்த காஷ்யப், தனக்கு உதவ உடனடியாக பைக்கை நிறுத்தியவர் அருகில் சென்று தனது நிலைமையை சொல்லி காற்றடிக்க கம்ப்ரசர் உள்ளதா என்று கேட்டிருக்கிறார்.

கம்பரசர் தனது பின்னால் வரும் வண்டியில் இருப்பதாக கூறிய அவர் பத்து நிமிடம் கழித்து வந்த காரில் இருந்து கம்ப்ரசரை எடுத்து கொடுத்துள்ளார்.

பஞ்சர் ஒட்டவும் உதவியவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்ட காஷ்யப்பிற்கு அஜீத் என்று கூறியிறகு தான், தான் நடிகர் அஜித்குமாருடன் இருப்பது புரிந்திருக்கிறது.

இதனை அடுத்து அஜிததுடன் வழியில் டீ குடித்த காஷ்யப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதோடு.

அஜித் மிகவும் எளிமையாக நடந்துகொண்டது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளார்.