சென்னை:

டிகர் அஜித்குமார் ஆலோசனையின் பேரில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் களின்  ‘தக்‌ஷா’ குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானத்துக்கு உலக போட்டி யில் 2வது இடம் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக  நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்ககழகம் நன்றி தெரிவித்து உள்ளது.

கார் ஓட்டுவதில் வல்லவரான நடிகர் அஜித்குமார் ஆளில்லா விமானங்கள் இயக்குவதிலும் திறமையானவர். இதையறிந்த அண்ணா பல்கலைக்கழகம் அவரை எம்.ஐ.டி. மாணவர்களுக்கு ஆலோசகராக நியமனம் செய்தது.

கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அஜித்குமாரை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமான திட்டத்தின் ஆலோசகராகவும் நியமித்தது.

அதைத்தொடர்ந்து அங்குள்ள ஏரோநாட்டிக்ஸ் படிப்பு மாணவர்களின் தயாரிப் புக்கு அஜித் ஆலோசனை வழங்கி வந்தார்.  அதைத்தொடர்ந்து ஆளில்லா விமானம் தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதற்கான குழு அமைக்கப்பட்டு, அதற்கு  தக்‌ஷா’ என்று பெயரிடப்பட்டது.

இந்த குழுவினர் அஜித் ஆலோசனையின் பேரில் ஆளில்லா குட்டி விமானத்தை தயாரித்து சாதனை படைத்தனர். இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக  நடத்தப்பட்டது. அவசர காலத்தில் மருத்துவ சேவைக்கு பயன்படும் வகையில் இந்த ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த விமானம் சர்வதேச அளவிலான கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டது.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச  போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது.

இந்த போட்டியில், 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் பங்கேற்றன.  அவற்றில் 11 ஆளில்லா குட்டி விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

இவைகளுக்குள் நடந்த போட்டியில், அஜித்தை தொழில்நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த  ‘தக்‌ஷா’ குழுவினர் தயாரித்த ஆளில்லா விமானம் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் அஜித்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தக்க சமயத்தில் உதவிய அஜித்துக்கும், அவரது ஆலோசனைக்கும் நன்றி தெரிவித்துள்ளது. ஆளில்லா விமான தயாரிப்பு திட்டம் முழுமையாக முடிந்து விட்டதாகவும், அஜித்தின் பங்களிப்பு மேலும் தேவை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.