ம்பால்

ஜய்குமார் பல்லா மணிப்பூரின் 19 ஆம் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

மணிப்பூரின் ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா கூடுதலாக வகித்து வந்தார். இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் அஜய் குமார் பல்லாவை மணிப்பூரின் புதிய கவர்னராக நியமித்தார்.

இன்றி மணிப்பூரின் 19-வது கவர்னராக மத்திய உள்துறை முன்னாள் செயலர் அஜய் குமார் பல்லா அம்மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அஜய்குமார் பல்லா மத்திய உள்துறை செயலராக அதிக காலம் பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்றவர் ஆவார். இவர் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த 1984 இல் அசாம்-மேகாலயா கேடரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.