டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும் . இதில் பியர் கிரில்ஸ் உடன் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.

தற்போது டிஸ்கவரி சேனல் தமிழிலும் தங்களது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. இதை ரஜினி மூலம் தொடங்கினர் .

நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]