ன்னியாகுமரி

யா வழி ஆன்மீக ஆலைவர் சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாமித்தோப்பு என்னும் பகுதியில் உருவான ஆன்மீக குழு ஐயா வழி என்ற பெயரில் இயங்கி வருகிறது.    ஐவா வழி என்பது பலவிதங்களில் இந்து சமயத்துடன் நெருக்கமாக காணப்பட்ட போதிலும் இவர்கள் தங்களை ஒரு தனி சமயமாக குறிப்பிட்டு வருகின்றனர்.

 இந்த குழுவுக்குத் தற்போதைய தலைவராக பால பிரஜாபதி அடிகளார் பதவி வகித்து வருகிறார்..  இவர் சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  இது தற்போது நடந்தது அல்ல, ஏற்கனவே அவர் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலும் இதே கருத்தைச் சொல்லி உள்ளார்.

அவர் தனது பேட்டியில்,

“ஐயா வழியை உருவாக்கிய ஐயா வைகுண்டர், மன்னனையே கேள்விகள் கேட்டு மக்களாட்சி வேண்டும் எனச் சொல்லி உள்ளார்.  தவிர அவர் பெண் அடிமைத்தனம் கூடாது எனவும் விதவைகள் மறுமணம் செய்ய  வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக அவர் வழிபாடுகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதையும் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவதையும் ஆதரித்துள்ளார்.

ஆனால் பாஜகவினர் கூறும் சனாதனம் என்னும் ஆன்மீகம் எங்களுக்குச் சிறிதும் ஏற்புடையது இல்லை.  ஐயா வழி என்பது வருணா சிரமத்துக்கு  எதிரானது ஆகும்.   அவ்வாறு இருக்க வருணாசிரமத்தை ஆதரித்து வளர்க்கும் சனாதனம் மற்றும் அதை ஆதரிக்கும் இயக்கத்தை எப்படி நாங்கள் ஏற்க முடியும்”

எனத் தெரிவித்துள்ளார்.