பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்(வயது 77) அவரின் மகன் அபிஷேக் பச்சன் (வயது 44) இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் தனித்தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன் ஏற்கெனவே நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை எடுத்துவருவதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் ஸ்வாப் பரிசோதனை நடந்துள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது
ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.