நடிகர் தனுஷ் நடிக்கும் விஐபி-2 திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இத்திரைப்படத்தில் ஒரு பவர் ஃபுல்லான லேடி கேரக்டர் இருப்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்யிடம் கதையை சொல்லியுள்ளார்களாம்.

கதையை கேட்ட ஐஸ்வர்யா, ஐயோ நா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லி தனுஷையும் சௌந்தர்யாவையும் திருப்பி அனுப்பிட்டாராம். அதன்பின் தான் கஜோலை அணுகியுள்ளார்கள் அவரும் கதை மிகவும் பிடித்துவிட உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். தமிழில் 20 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel