
சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த விருதுபெற்றதை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த டீமிற்கு என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெருநன்றியும்” என கூறினார் .
Patrikai.com official YouTube Channel