‘பூமிகா’ திரைப்படத்தை தொடர்ந்து அர்ஜுனுடன் இணைந்து புதிய த்ரில்லர் கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதில் அர்ஜுன் காவல்துறை விசாரணை அதிகாரியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியையாகவும் நடிக்கவுள்ளனர்.

தினேஷ் லட்சுமணன் இயக்கவுள்ள இந்தப் படத்தினை ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும் பிக் பாஸ் அபிராமி வெங்கடாச்சலம், பிராங்க்ஸ்டர் ராகுல், பிரவீன் ராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பாரத் ஆசீவகன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படம் பூஜையோடு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]