
மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய் .
திருமணத்திற்குப் பிறகும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர்.
தற்போது முதல் முறையாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழிகளில் தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், முதல் முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார்.
’ராவோயி சண்டமாமா’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்த ஐஸ்வர்யா ராய், ஹீரோயினாக தெலுங்கு சினிமாவில் களம் இறங்குவது இதுவே முதல் முறை என்பதால், இப்போதே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel