மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதால், தனியாக போஸ்டர் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
இதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார்.நட்பின் அடிப்படையில் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரை குடும்பத்துடன் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.