aishwarya-dhanush
ஸ்டன்ட் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் – மத்திய மந்திரி திரு. வெங்கையா நாயுடு அவர்களிடம் திருமதி. ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை !!
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படம் “ சினிமா வீரன் “ சினிமாவின் நிஜ ஹீரோக்களான சண்டை ( ஸ்டன்ட்) கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான பத்மவிபூஷன் திரு. ரஜினி காந்த் அவர்கள் பின்னணி ( Voice Over ) பேசுகிறார்.
சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமதி. ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு அவர்களை சந்தித்து , சினிமாவில் உள்ள பல துறையில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடம் தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதே போல் நிஜ ஹீரோக்களான சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்தார். இதை தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் அனைவரும் திருமதி. ஐஸ்வர்யா தனுஷ் அவர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.