சென்னை
சென்னை நகரில் பல இடங்களில் ஏர்டெல் நெட்நொர்க் சேவை முடங்கி உள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஏர்டெல் முன்னணியில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் சேவையை நாடு முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
திடீரென்று நேற்று இரவு முதல் ஏர்டெல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டது. இவ்வாறு முடங்கிய நெட்வொர்க்கால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை நகரில் பல இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் போன் பேச முடியாமல் தவித்தனர். இணையச் சேவையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நெட் வொர்க் பாதிக்கப்பட்டதற்குத் தொழில்நுட்ப கோளாறு காரணமா இல்லை வேறு ஏதும் காரணமா என்பது குறித்து இதுவரை ஏர்டெல் சார்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.