சென்னை

சூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு  தேர்வு செய்த 5 இடங்களை விமான ஆணைய ஆய்வு செய்ய உள்ளது.

தமிழகத்தின் ஒரு பகுதியான்ச் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தமிழகம் – கர்நாடகா மாநிலத்தின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு தற்போது தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதால் ஆண்டுதோறும் புதிய தொழில் நிறுவனங்கள் ஓசூரை நோக்கி வருகின்றன.

ஓசூரை மேம்படுத்தும் வகையில் புதிதாக அங்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் ஜூன் மாதம் 27 ம் தேதி தமிழக சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியான ஒரு மாதத்தில் தமிழக அரசு சார்பில் முதற்கட்ட பணிகள் வேகமாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ள 5 இடங்களை தேர்வு செய்து இடங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு இந்திய விமான ஆணையத்திடம் பரிந்துரையாக வழங்கி உள்ளது.

இடங்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் வழங்கிய இந்த பரிந்துரையை ஏற்று இந்திய விமான ஆணையம் இந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் வழங்கும். அதன்பிறகு விமான நிலையம் அமைப்பதன் அடுத்தகட்ட பணி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.