ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஏற்கனவே உச்சிப்புளி ஐ.என்.எஸ்,. பருந்து கடற்படை விமானதளம் உள்ள நிலையில், இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்தி, உதான் திட்டத்தின்படி சிறிய ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில், விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே உமத்திய அரசின் உதான் திட்டத்தில் உச்சிப்புளி கடற்படை விமான தளத்திலிருந்து, பயணிகள் விமானங்களும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தேவையான நிலம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு செய்து தர வேண்டும் என கூறியதுடன், அரற்கு கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு ரூ.36கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதில் தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டாததால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது, இதுதொடர்பான கேள்விக்கு பதில் கூறிய மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்., கடற்படை விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் மாவட்ட தொழில் அதிபர்கள், வெளிநாடு வாழ் ராமநாதபுரம் தொழில் அதிபர்கள், வெளிநாடுகளில் வேலை செய்வோரின் குடும்பத்தினர், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பை செயலாக்கத்திற்கு கொண்டு வர மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராமநாதபுரம்: தமிழகத்தில் வறட்சி மாவட்டமாக அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரத்தில் ஏற்கனவே உச்சிப்புளி ஐ.என்.எஸ்,. பருந்து கடற்படை விமானதளம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் தமிழகத்தின் மிக நீண்ட (271 கி.மீ.,)கடற்கரையை கொண்டது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், அழகன்குளம், தொண்டி ஆகிய இடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிகளவில் வெளி நாடுகளுக்கு செல்கிறது. இம்மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயம், மீன் பிடித்தல்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளது.ஆண்டு தோறும் 2 கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தேவிப்பட்டினம் நவபாஷண நவக்கிரக கோயில், உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜர் சன்னதியுடன் மங்களநாதர் சிவன் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில். ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், தனுஷ்கோடி, குந்துகால் குருசடை தீவு, விவேகானந்தர் மண்டபம், மாங்ரோவ் நிறைந்த காரங்காடு, பிச்சை மூப்பன் வலசை, ஏர்வாடி தர்ஹா, ஆகிய இடங்களுக்கு பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் மீன்கள், பனை கைவினைப் பொருட்கள், பனங்கருப்பட்டி, குண்டு மிளகாய், மரக்கரி,மல்லிகை செடி உள்ளிட்டவை மலேசியா, சிங்கப்பூர்,துபாய் பறக்கின்றன. இங்குள்ள பலர் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியாவில் வணிக தொடர்பு வைத்துள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் மதுரை, திருச்சி விமான நிலையங்கள் வழியாக ராமநாதபுரம் வந்து செல்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 35 கி.மீ.,, ராமநாதபுரத்தில் இருந்து 20 கி.மீ.,ல் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்.. பருந்து கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தி கைவிடப்பட்ட விமான தளத்தில் 1982-ல் இந்திய கடற்படை விமான தளம் அமைத்தது. இங்கிருந்து மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்கின்றனர். 920 மீ., நீள ஓடுதளம் உள்ளது. ஐலண்டர், டோர்னியர், சேட்டாக், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் விமானங்கள் இயக்க 2 கி.மீ., நீள ஓடுதளம் தேவை. அடுத்த பத்து ஆண்டுகளில் 2600 மீ., நீள ஓடுதளம் கொண்ட பெரிய கடற்படை விமான தளமாக ஐ.என்.எஸ்., பருந்தை மாற்றவும் திட்டம் உள்ளது.
இந்திய- இலங்கை கடல் எல்லையில் இருப்பதால் கடலோர காவல் படை ரோந்து, அதற்காக தனியாக உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தளமும் அமைந்துள்ளது. இதன்மூலம் கடற்கரை பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பது, போதைப்பொருள் கடத்தலை தடுப்பது போன்ற பணிகளில் இங்கிருந்து ஈடுபடுகின்றனர்.
இநத் நிலையில், உச்சிபுளி தளத்தின் ஒரு பகுதியை விரிவாக்கம்செய்து பயணிகள் விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ்., கடற்படை விமான தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் மாவட்ட தொழில் அதிபர்கள், வெளிநாடு வாழ் ராமநாதபுரம் தொழில் அதிபர்கள், வெளிநாடுகளில் வேலை செய்வோரின் குடும்பத்தினர், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.