டில்லி:
பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் சில மாடல் லேப்டாப்புகளை இந்திய விமானப் பயணங்களில் எடுத்துச்செல்ல விமான ஆணையம் தடை விதித்துள்ளது.
கடந்த 2015 செப்டம்பர் முதல் 2017 பிப்ரவரி இடையேயான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மேக்புக் புரோ லேப்டாப்பின் குறிப்பிட்ட மாடல்களில், அதன் லித்தியம் பேட்டரி அதிக அளவில் சூடாவதால், தீ பிடிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, குறிப்பிட்ட அந்த மாடல் ஆப்பிள் லேப்டாப்புகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் பேட்டரி அதிகம் சூடு ஆவதை ஒத்துக் கொண்டுள்ள நிலையில், அந்த லேப்டாப்-ன் சீரியல் எண் சோதிக்கப்பட்ட பின் பாதிப்புள்ள லேப்டாப் என்றால் ஆப்பிள் இலவசமாகவே அந்த லேப்டாப்பின் பேட்டரியை மாற்றித் தரும்” எனக் குறிப்பிட்டுள்ளது.