டில்லி,
ர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடிசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்துள்ளார்.
maran
இதற்கு கைமாறாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்தது தெரியவந்தது.
இந்த பணப்பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
இதனிடையே இந்த வழக்கு விசாரணை புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ஏர்செல் மேக்சிஸ் முறைகேடில் மாறன் பிரதர்ஸ்க்கும் பங்கு உள்ளது என அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, தங்களை கைது செய்து விடுவார்களோ என அஞ்சி, சன் குரூப் நிறுவனர்களான  தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் சிபிஐ கோர்ட்டில்  நேரில் ஆஜராகினர். அப்போது, இந்த  வழக்கில் முன்ஜாமீன் அளிக்கும்படி மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
maran-grups
ஆனால், விசாரணையின்போது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கப் பிரிவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லி  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாறன் பிரதர்ஸ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து,  ஏர்செல் மேக்சிஸ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று விசாரணைக்கு அந்த வழக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம், மாறன் பிரதர்ஸ் தாக்கல் செய்திருந்த   மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை மட்டும்தான் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது..