மக்கள் மெயில் என்கிற பத்திரிகையில் பணியாற்றி வரும் (யமுனா) நயன்தாரா தனக்கு மாப்பிள்ளை பார்க்க வருவதால் வீட்டை விட்டு வெளியேறி பொள்ளாச்சியில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு பேய் இருப்பது போல காட்டி youtubeல் சம்பாதிக்கலாம் என அவரும் அவரது பாட்டி மற்றும் யோகி பாபு உதவியுடன் மிகவும் பிரபலம் ஆகிறார். ஆனால் அங்கு நிஜ பேய் பவானி அவரை பயமுறுத்துகிறது.
நயன்தாரா. பவானி சந்தித்த துயரங்கள் கருப்பு வெள்ளையில் காட்டியிருக்கிறார்கள் அவர் எப்படி இறந்தார், அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்கிறார் என்பது மீதி கதை.
டபுள் ஆக்ஷனில் நடிக்கும் நயன்தாரா வழக்கம்போல் தன நடிப்பில் தனது முத்திரையை பதித்துள்ளார். பவானி பேய் ஏன் நயன்தாராவை பழிவாங்க துடிக்கிறது என ஆவலை தூண்டி விட்டு க்ளைமாக்சில் தடுமாறியிருக்கிறார் இயக்குனர். இது மக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கிறார் கலையரசன். கலையரசன்.
தான் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் போது எதிரிகளால் கொல்லப்பட்டு அவர்களை பழிவாங்கும் ஆத்மா போன்ற கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் இந்த படத்தில் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல. யாருக்கும் யாரோடும் தொடர்பு இல்லை ஆனால் நாம் செய்யும் ஒரு சிறிய பிழை ஒருவரின் வாழ்க்கையே முடித்துவிடுகிறது என்பதுதான் இப்படத்தில் புதிதாக கையாண்டிருக்கும் யுக்தி.
மா, லக்ஷ்மி குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜுன் இதையும் குறும்படமாகவே கையாண்டிருக்கிறார் என்பது தான் வேதனையான விஷயமே.
மொத்தத்தில் ஒரு சில இடங்களில் சறுக்கல்கள் இருந்தாலும் படத்தை சரியாய் விடாமல் தாங்கி பிடித்துள்ளார் நயன்தாரா “ஐரா” எனும் பெயர் காரணம் படத்தின் இறுதிவரை சொல்லப்படாதது பெரும் பலவீனம்.