சென்னை

ந்திய விமானப்படை நிறுவனதினத்தையொட்டி அக்டோபர் 8 ஆம் தேதி ரஃபேல் விமான சாகசங்கள் நடைபெற உள்ளன.

இந்திய விமானப்படை மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்ப்தற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று ரஷ்யாவிடமிருந்து நாம் வாங்கிய போர் விமானங்கள். அதாவது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த விமான படையை ரஷ்யா கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் விமானங்கள், இந்திய விமானப்படையின் தரத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

இரண்டாவதாக இந்தியாவுக்கு வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள். உலகமே அடேங்கப்பா என்று திரும்பி பார்க்கும் வகையில் ரஃபேல் விமானம் இருக்கிறது. இதனை இந்தியா சமீபத்தில் வாங்கியதன் மூலம் சீனாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இப்படி சர்வதேச அளவில் இந்தியா தனது விமானப்படையை சிறப்பாக கட்டமைத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தனது விமானப்படையின் பலத்தை காட்டும் விதமாக, விமான சாகச நிகழ்ச்சிகளை விமானப்படை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் வழக்கமாக விமானப்படை தளங்கள் இருக்கும் பகுதியில்தான் நடத்தப்படும். உதாரணமாக கோவை சூலூர், தஞ்சை, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் இது நடத்தப்பட்டு வந்தது. ஆனால், முதல் முறையாக தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

“இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னையில் அக்.8ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் அணிவகுப்பு சென்னையில் காலை 7.45 மணிக்கு தொடங்கும். அணிவகுப்பை தொடர்ந்து மெரினா கடற்கரையில் பிரமாண்டமான விமான கண்காட்சி நடைபெறும். 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது”

என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.