புதுச்சேரி:

ரும் ஜூலை 15ந்தேதி முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும்  ஜூலை 15-ம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலத்துக்கு புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவை  ஏர் ஒடிஷா நிறுவனம் தொடங்கியுள்ளது.