டெல்லி

மூண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது.

இன்று (ஞாயிறு) காலை தலைநகர் டெல்லியில் வெயில் குறைந்து இருந்ததுடன் காற்றின் தரமும் திருப்திகரமான பிரிவின்கீழ் நீடிக்கிறது. இன்று காலை  9 ,அஒல்லி காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) தகவலின்படி காற்றின் தரக்குறியீடு (AQI) 89 ஆக இருந்தது.

பொதுவாக காற்றின் தரக்குறியீடு அளவுகள் 0-50 என இருந்தால் நல்லது, 51-100 திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது, 401-500 கடுமையானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில் நேற்று காற்றின் தரம் தூய்மையாக (85) இருந்தது என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

இதே நிலை  இன்றும் நீடிக்கிறது. டெல்லியில் இன்று வெப்பநிலை குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியசாக பதிவானது. இது பருவகால சராசரி அளவைவிட 2.9 புள்ளிகள் அதிகமாகும்.