சென்னை:
தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே  வெப்பசலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது,

தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றபத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க  செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையிலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 4 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]