ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் தனியாருக்கு விற்பனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Must read

டெல்லி:

ஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்இந்தியா விமான நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள், பட்ஜெட் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசின் விமான சேவை நிறுகூனமான,  ஏர் இந்தியா நிறுவனம் நாள் ஒன்றுக்கு 26 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் 7ஆயிரத்து 600 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளதால் அதன் 95 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  மேலும்,  தற்போதைய 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை சிறப்புத் தேவைக்கான வாகனம் கணக்கில் சேர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article