புதுடெல்லி:

ஜெட் ஏர்வேஸ் சேவை ரத்தாகும் போது, அதன் பயணிகளை ஏற்றிக் கொள்ளமாட்டோம்  என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பொதுவாக, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு விமானம் ரத்து செய்யப்படும் போது, மற்ற விமானங்கள் அந்த பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம்.

கடும் நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடிக்கடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸுக்கு தற்போது ரூ.8,200 கோடி கடன் உள்ளது. இதனை சமாளிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சம்பளம் தாமதமாக கிடைப்பதால், பெரும்பாலான பைலட்கள் நிர்வாகத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இது போன்ற காரணங்களால், விமான சேவை ரத்தாகும் பட்சத்தில், அதன் பயணிகளை ஏற்ற மாட்டோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.