டெல் அவிவ்
இஸ்ரேல் நாட்டின் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திடீர் ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது.
மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நேற்று டில்லியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு நேற்று இயக்க வேண்டிய AI139 என்ற எண் கொண்ட விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல் அவிவ நகரில் இருந்து டெல்லி வர வேண்டிய AI140 விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது..
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கு, வரும் 14-ந்தேதி வரை விமானச் சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வரும் நிலையில், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.