டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்குe நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை இந்திய நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு நிறுவனங்களின் 388 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பொருட்டு, இன்று மொத்தம் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ,இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள்‘, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரப்பில் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) டெல்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு 8 சிறப்பு மீட்பு விமானங்களை இயக்குகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது வழக்கமான விமான சேவைகளை மார்ச் 4, நள்ளிரவு 11:59 மணி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
விமான கட்டணங்கள் அநியாயமாக உயர்த்தப்படுவதை தடுக்க அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுதல் மற்றும் மறுபதிவு செய்வதில் பயணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்ட தூர விமானங்கள் தற்போது போர் நடக்கும் வான்பரப்பை தவிர்த்து, நீண்ட மாற்று பாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன.
[youtube-feed feed=1]