மும்பை: ஏர் இந்தியா விமானத்தில், எகனாமிக் வகுப்பில், மும்பை – நியூயார்க் பயணம் செய்பவர்களுக்கு, கொண்டுசெல்லும் சுமைக்கான சலுகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த பிப்வரி 27ம் தேதி முதல் பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டது. இதனால், பல்வேறு விமானங்களும் சுற்றிசுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மும்பையிலிருந்து நியூயார்க் செல்லும் ‘ஏர் இந்தியா’ விமானத்தில், எகனாமிக் வகுப்பு பயணிகளுக்கான சுமை அளவு சலுகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது 23 கிலோ அளவுள்ள ஒரு சுமையை மட்டுமே கொண்டுசெல்ல முடியும். இதற்கு முன்னர், அதே எடையுள்ள 2 சுமைகளை கொண்டு செல்லலாம். ஆனால், தற்போது சுற்றுவழியில் செல்ல வேண்டியிருப்பதால், அதிக எரிபொருள் செலவாவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சுமை விதிமுறை, மும்பை – நியூயார்க் பயண வழிக்கு மட்டும்தானே ஒழிய, வேறு பயண வழிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

– மதுரை மாயாண்டி