டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும்  மத்திய அரசுக்குச் பொதுத்துறையை சேர்ந்த விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதால், மேலும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியால கடந்த 2019ம் ஆண்டே  சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையால் தத்தளித்து வந்தது.  சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டி, விமான எரிபொருள் விலையேற்றம், போதிய மூலதனம் இல்லாதது போன்ற காரணங்களால்,  ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் கணிசமான பங்குகளை விற்க மத்திய அரசு  திட்டமிட்டது .

முதல்கட்டமாக   ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை மட்டும் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளையும் விற்பனை செய்யும் நிலைக்கு அரசு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து,  நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம்  10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2018-ம் நிதி ஆண்டில் ரூ. 5,300 கோடியாக இருந்த நஷ்டம், 2019-ம் நிதி ஆண்டில் ரூ. 8,500 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில் 2020-ம் நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  மத்திய அரசு வசம் உள்ள 51 சதவிகிதம் ஏர் இந்திய நிறுவனப்பங்குகளை  வாங்க டாட்டா நிறுவனம் முன்வந்தது.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், டாடா குழுமம் உடன் இணைந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது சிங்கப்பூர் நிறுவனம் விருப்பம் காட்டாததால், டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.