டெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமான அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா டெல்லி அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது.
ஏர் இந்தியா டெல்லி அலுவலகத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அங்கு பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமையகம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏர்இந்திய தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரதீப் சிங் கரோலா உட்பட அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அதிகாரி, “டெல்லியில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.