SARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, பாதிக்கப்பட்டவர்களை வெறுமனே ஒதுக்கி வைப்பதாகும். 40% நோய்தொற்று அறிகுறியற்றவை மற்றும் அறிகுறியற்ற நபர்கள் மற்றவர்களுக்கு வைரஸை பரப்ப முடியும் என்பதால், தனிமைப்படுத்துதல் மிகவும் கடினமாக இருக்கும். அதேபோல மூடிய இடங்களில் வைரஸ் பரவாமல் இருக்க முகக் கவசம் சிறந்த மாற்றாக இருந்தது. ஆனால், அதே மூடிய கட்டிடத்தில் ஒரு பாதிக்கப்பட்ட நபர் இருந்தால் காற்றில் சில குறிப்பிட்ட அளவுக்கான வைரஸ்கள் கலக்க வாய்ப்புள்ளது.
கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் பேராசிரியரான நான், மூடப்பட்ட சுற்றுபுறங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான ஆய்வுகளில் உள்ளேன். இத்துய எனது பல்கலைக் கலக்கம், எனஹு குழந்தைகள், அவர்களின் பள்ளிகள் மற்றும் அலாஸ்கா மாநில சட்டமன்றம் கூட என்னிடம் ஆலோசனைக் கேட்டுள்ளன. ஒரு கட்டிடத்திற்குள், வைரஸ் காற்றில் கலந்தவுடன் உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன: வெளியில் இருந்து புதிய காற்றைக் கொண்டு வருவது அல்லது கட்டிடத்தின் உள்ளே இருக்கும் காற்றிலிருந்து வைரஸை அகற்றுவது.
அறையின் காற்றோட்டம்
பாதுகாப்பான மூடப்பட்ட கட்டிடம் என்பது உள்ளே இருக்கும் பழைய காற்றை தொடர்ந்து வெளிப்புற காற்றைக் கொண்டு புதுப்பிப்பது. வணிக கட்டிடங்களில், வெப்பம், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (எச்.வி.ஐ.சி) அமைப்புகள் மூலம் வெளிப்புற காற்று பொதுவாக செலுத்தப்படுகிறது. வீடுகளில், வெளிப்புற ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வழியாக வெளிப்புற காற்று உள்ளே நுழைகிறது, கூடுதலாக பல்வேறு மூலைகள் மற்றும் கிரானிகள் வழியாக வெளியேறுகிறது. எளிமையாகச் சொன்னால், ஒரு கட்டிடத்தின் உள்ளே மிகவும் புதிய, வெளிப்புற காற்று, செல்வது சாலச் சிறந்தது. இவ்வாறு காற்றைக் கொண்டு வருவது ஒரு கட்டிடத்தில் உள்ள எந்த அசுத்தத்தையும், வைரஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றையும் நீர்த்துப்போகச் செய்கிறது, மேலும் உள்ளே இருக்கும் எவரும் வைரசுக்கு நேர்படுவது குறைகிறது. என்னைப் போன்ற சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் காற்று பரிமாற்ற வீதம் எனப்படும் ஒரு அளவைப் பயன்படுத்தி ஒரு கட்டிடத்திற்குள் எவ்வளவு வெளிப்புற காற்று நுழைகிறது என்பதைக் கணக்கிடுகிறோம். இந்த எண் ஒரு கட்டிடத்தின் உள்ளே உள்ள காற்று, வெளியில் இருந்து வரும் காற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மாற்றப்படும் எண்ணிக்கையை அளவிடுகிறது.
சரியான விகிதம் அறையில் உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் அறையின் அளவைப் பொறுத்தது என்றாலும், பெரும்பாலான வல்லுநர்கள் மூன்று முதல் நான்கு பேர் கொண்ட 10 அடி-க்கு -10-அடி அறைக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை காற்றை புதுப்பித்தல் நல்லது என்று கருதுகின்றனர். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு மணி நேரத்திற்கு ஒன்பது முறை பரிமாற்ற வீதம் ஒரு ஹாங்காங் மருத்துவமனையில் SARS, MERS மற்றும் H1N1 ஆகியவற்றின் பரவலைக் குறைத்ததாகக் கூறுகிறது.யு.எஸ். இல் உள்ள பல கட்டிடங்கள், குறிப்பாக பள்ளிகள், பரிந்துரைக்கப்பட்ட காற்றோட்டம் விகிதங்களை பூர்த்தி செய்யவில்லை. அதிர்ஷ்டவசமாக, ஒரு கட்டிடத்திற்குள் அதிக வெளிப்புற காற்றைப் பெறுவது மிகவும் எளிதானது. ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்திருப்பது ஒரு நல்ல தொடக்கமாகும். ஒரு சாளரத்தில் ஒரு விசிறியை வைப்பது காற்று பரிமாற்றத்தையும் பெரிதும் அதிகரிக்கும். ஜன்னல்கள் இல்லாத கட்டிடங்களில், இயந்திர காற்றோட்டம் முறையை பொருத்தலாம். ஆனால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ள எந்த அறையிலும், காற்று வேகமாக மாற்றப்பட வேண்டும்.
காற்றோட்டத்தை அளவிட CO2 ஐப் பயன்படுத்துதல்
நீங்கள் இருக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? இது உண்மையில் கணக்கிட மிகவும் கடினமானது. ஆனால் அளவிட எளிதான வழிமுறை ஒன்று உள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் சுவாசிக்கும்போது, CO2 ஐ காற்றில் வெளியேற்றுகிறீர்கள். கொரோனா வைரஸ் பெரும்பாலும் சுவாசம், இருமல் அல்லது பேசுவதன் மூலம் பரவுவதால், நீங்கள் CO2 அளவைப் பயன்படுத்தி தோற்று நோய் உண்டாக்கும் எச்சங்களால் நிரப்பப்படுகிறதா என்பதைப் பார்க்கலாம். CO2 நிலை போதுமான புதிய காற்று வெளியேறுகிறதா என்று மதிப்பிட அனுமதிக்கிறது. வெளிப்புறத்தில் CO2 அளவுகள் ஒரு மில்லியனுக்கு 400 பகுதிகளுக்குள் (பிபிஎம்) இருக்கலாம். நன்கு காற்றோட்டமான அறையில் 800 பிபிஎம் CO2 இருக்கும். எனவே அதை விட உயர்ந்த அளவு இருக்கும் அறைகள் அதிக காற்றோட்டம் தேவை என்பதற்கான அறிகுறியாகும்.
ஏர் கிளீனர்கள் – காற்று சுத்திகரிப்பான்கள்
போதுமான காற்றோட்டத்தை அமைக்க வழியில்லாத அறைகளில் நீங்கள் இருந்தால், பொதுவாக காற்று சுத்திகரிப்பாளர்கள் என்றும் அழைக்கப்படும் ஏர் கிளீனரைப் பயன்படுத்தலாம். இந்த இயந்திரங்கள் காற்றில் இருந்து கழிவு துகள்களை அகற்றுகின்றன, அவை பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் கொண்ட துகள்களையும் நீக்க முடியும். கொரோனா வைரஸுக்கு ஏர் கிளீனர்கள் பொருத்தமாக இருக்கும் என்று யு.எஸ். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் கூறினாலும், அனைத்து ஏர் கிளீனர்களும் அதை செய்வதில்லை என்பதை கவனத்தில் கோல வேண்டும். எனவே, நீங்கள் அதை வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய சிலவை பின்வருமாறு:
கருத்தில் கொள்ள வேண்டிய முதல் அம்சம், ஒரு ஏர் கிளீனரின் வடிகட்டி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என அறிந்து கொள்வது ஆகும். உங்களுக்கான சிறந்த தேர்வு ஒரு சிறந்த காற்று துகள்கள் வடிப்பான் ஆகும். இது காற்றில் உள்ள 99.97% க்கும் அதிகமானவற்றை நீக்குகின்றன. கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், காற்று வடிப்பான் எவ்வளவு திறன் கொண்டது என்பது. ஒரு பெரிய அறை – அல்லது அதில் எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்ட அறையை சுத்தம் செய்ய திறன் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக ,ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் வெவ்வேறு வகுப்பறை அளவுகளுக்கு எவ்வளவு திறன் வாய்ந்த காற்று சுத்திகரிப்பான் தேவை என்பதை சிந்திக்கலாம். இறுதியாக, கருவிக்கு உறுதியளிக்கும் ஏர் கிளீனரை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
மோசமான காற்றோட்டம் கொரோனா வைரஸைப் பரப்பும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான யு.எஸ். அமைப்பு கூறுகிறது.அறையின் உட்புற சூழலை நீங்கள் கட்டுப்படுத்துவதானால், அறைக்கு போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.கட்டிடத்திலிருந்து வெளியே புழக்கத்தில் இருந்து போதுமான புதிய காற்றைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்ததும் வெப்பம், மூச்சு திணறல் மற்றும் கூட்டமாக இருப்பதை உணர்ந்தால், கூட்டமாகவும் உணர்ந்தால், போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. உடனே திரும்பி விடுங்கள். காற்றோட்டம் மற்றும் காற்று வடிப்பாங்களை அமைப்பதன் மூலம் சரி செய்யலாம். இயலாத நிலையில் விலகி இருக்கலாம். இதன் மூலம் ங்கள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு கருவித்தொகுப்பில் மற்றொரு சக்திவாய்ந்த கருவியைச் சேர்க்கலாம்.