டில்லி,

ந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவமனையான டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்-கள் வேலை நிறுத்ததத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் மற்றும் முக்கியமான சிகிச்சைகள் முடங்கின. இதன் காரணமாக நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதின் காரணமாக 90 அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டன.

மேலும் செவிலியர்களின் போராட்டம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நோயாளிகள் வேறு மருத்துவமனையை நோக்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான  நோயாளிகள் நாடி வரும் ஏய்ம்ஸ் மருத்துவமனையின் வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டு காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததால் பலமணி நேரம் காத்திருந்த நோயாளிகள் ஏமாற்றத்துடந் திரும்பிச் சென்றனர்.

ஏழாவது ஊதியக்குழுவில் அறிவித்ததையும் விட அதிக ஊதியம் கோரி செவிலியர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டார்கள்.

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர்.