ஐதராபாத் :

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.ஐ.எம்,ஐ.எம். என்ற கட்சி, பீகார் மாநில தேர்தலில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் சீமாச்சல் பகுதியில், வழக்கமாக ஆர்.ஜே.டி. கட்சிக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் இந்த முறை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

இந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத் மக்களவை உறுப்பினராக உள்ளார். தனித்தே நின்று அவர் வெற்றி பெற்று வருகிறார்.

பீகாரில் அவரது கட்சி ஊடுருவியதால். மெகா கூட்டணி ஆட்சி அமைக்க இயலாமல் போனது.

இந்நிலையில் ஒவைசி அளித்துள்ள பேட்டியில் “பீகாரை அடுத்து மே.வங்காள மாநில சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அசாதுதீன் ஒவைசி , “TWINKLE TWINKLEE ..LITTLE STAR. என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்வேன்” என்றும் ஒவைசி சிரித்தபடி கூறினார்.

– பா. பாரதி