டில்லி,

பிரபலமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள், இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் (AIIMS)  மருத்துவ கல்லூரிகளில் இளநிலை (UG /MBBS) மற்றும் முதுநிலை (PG – MD, MS) மருத்துவ படிப்புகளில் சேர, அகில இந்திய அளவில் நடைபெறும்  நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.

இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவ வளைதளத்தின் மூலம் ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்று தொடங்கும் விண்ணப்ப பதிவு மாதம் மார்ச் 5 வரை கால அவகாசம் உள்ளது. அதைத்தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு,நுழைவுத் தேர்வு மே 26, 27 அன்று  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நுழைவுத்தேர்வு நாடு முழுவதும்  உள்ள  முக்கிய நகரங்களில் மட்டுமே  நடைபெறும். இந்த ஆண்டு முதல்  இணையதளம் வழியாக தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் டில்லி, பாட்னா, புவனேஸ்வரம், குண்டூர் உள்பட 9 நகரங்களில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சேர்ந்த படித்து மருத்துவராகலாம்.

ஆன்லைன் பதிவு குறித்து தெரிந்துகொள்ள இங்கே ‘கிளிக்’ செய்யும்….

https://www.aiimsexams.org/pdf/Registraton%20Instructions%20for%20website%20mbbs2018.pdf